உயிர் ஹியூமிக் அமிலம் - திரவ நிலை
உயிர் ஹியூமிக் அமிலம் - திரவ நிலை, ஹியூமிக் அமிலம், ஃபல்விக் அமிலம் கடல் பாசி சாரம் மற்றும் மண்புழு வடிநீர் ஆகியவை கலந்த கலவையாகும். இது பயிர் வளர்ச்சியை திறம்பட ஊக்குவிக்கிறது.
பயன்கள் 1. உயிர் ஹியூமிக் அமிலம் மண் வளம், மண்ணின் பண்புகள், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் வேர் உட்பூசணத்தின் செயல்களை அதிகரிக்கிறது.
- உயிர் ஹியூமிக் அமிலம் நீர் மற்றும் சத்துக்களைப் பயிர்கள் எடுத்துக்கொளவதை மேம்படுத்தி செம்மைப் படுத்துகிறது. இதனால் பயிர்கள் ஒளிச்சேர்க்கை செய்வதை அதிகரிக்கிறது.
- உயிர் ஹியூமிக் அமிலம் இரும்பு துத்தநாகம் போன்றவற்றை இணைக்கம் காரணி (கீலேட்டிங் ஏஜெண்ட்) மற்றும் நோய் அடக்கியாகச் எசய்லபடுகிறது.
- உயிர் ஹியூமிக் அமிலம் துகள்களைப் பினணக்கிறது. ஆகவே மண்ணின் பொல பொலப்புத் தன்மை மண்ணின் காற்றோட்டம் மண் வடிகால் மண்ணின் நீர் பிடிப்புத்திறன் ஆகிய பௌதீகப் பண்புகளை மேம்படுத்துகிறது.
- உயிர் ஹியூமிக் அமிலத்தில் பயிர்கள் வளர்ச்சிக்கு இன்றியமையாத அங்கக மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. மற்றும் இலை செல் பிரிதலை துரிதப்படுத்தி பயிர வளர்சிசியைத் தூண்டுகிறது.
- உயிர் ஹியூமிக் அமிலம் மண்ணில் தார அமில் நிலையைச் சமப்படுத்துகிறது.
- உயிர் ஹியூமிக் அமிலம் தழை மணி சாம்பல் இரும்பு துத்தநாகம் மற்றும் பிற சத்துக்களையும் பயிர்கள் எளிதாக எடுத்துக் கொள்ளச் செய்கிறது.
- உயிர் ஹியூமிக் அமிலம் மணிச்சத்தானது பிற தனிமங்களான கால்சியம் இரும்பு மெக்னீசியம் மற்றும் அலுமினியம் போன்றைவையோடு வேதி வினை புரிவதைக் குறைத்து அவற்றை பயிர்கள் எடுத்துக் கொள்ளும் தன்மைக்கு மாற்றுகிறது.
- உயிர் ஹியூமிக் அமிலம் இரும்புச் சத்துப் பற்றாக்குறை காரணமாக பயிர்களின் குளோரோசிஸ் எனப்படும் பசுமைச் சோகை ஏற்படுவதை முற்றிலும் நீக்குகிறது.
- உயிர் ஹியூமிக் அமிலம் மண்ணில் நச்சுப் பொருட்கள் சேர்வதைத் தடுக்கிறது.
பயன்கள்
அனைத்துப் பயிர்களுக்கும்
அளவு
- தெளிப்பு 5 முதல் 10 மில்லி / ஒரு லிட்டர் தண்ணீ ர். 2. மண் மூலம் விடுதல் / சொட்டு நீர்ப்பாசனம் 1 லிட்டர் ஏக்கர்