உயிர் பஞ்சகவ்யா
உயிர் பஞ்சகவ்யா என்பது மாட்டுத் கோமியம் சாணம் பால் தயிர் நெய் மற்றும் பழங்கள் சீரிய முறையில் கலந்த விஞ்ஞான முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு இயற்கை கலவையாகும்.
பயன்கள்
- பயிர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பயிர்களுக்கு நோயை எதிர்த்துப் போராடும் தன்மையை அளிக்கிறது மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களை குணமடைய வைக்கிறது.
- பயிர்களின் வளர்ச்சியைத் தூண்டுவதால் நிறைய கிளைகளோடு பயிர் வளர உதவுகிறது. மேலும் அதிகப்படியான பெண் மலர்களோடு அடர்த்தியான மலர்களை மலரச் செய்கிறது.
- உயிர் பஞ்சகவ்யா விதை நேர்த்தி நாற்றுக்களை நனைத்தல் மற்றும் கிழங்கு வகைளைச் சேமித்தல் ஆகியவற்றில் உதவுகிறது.
- பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துப் பேரூட்டங்கள் நுண்ணூட்டங்கள் மற்றும் இன்டோல் அசிடிக் அமிலம் மற்றும் ஜிப்ரலிக் அமிலம் போன்ற வளர்ச்சி ஊக்கிகளைக் கொண்டுள்ளது.
- உயிர் பஞ்சகவ்யா தெளிக்கப்பட்ட பயிர்கள் பெரிய இலைகளோடு மிக அடர்த்தியாக வளர்கிறது. ஒளிச் சேர்க்கையானது ஊக்குவிக்கப்பட்டு உயிர்வளி செயல்திறன் அதிகரிப்பதால் பயிர் வளர்ச்சிதை மாற்றத்திற்குத் தேவையான உயிர் வேதிப் பொருட்களைத் தயாரிக்க உதவுகிறது.
- அடர்த்தியான மற்றும் மிகுதியான வேர் மண்டலத்தை உருவாக்குகிறது. அவை ஆழமாக ஊடுருவுவதால் அதிகப்படியான சத்துக்களையும் நீரையும் பயிர்கள் எடுத்துக் கொள்ள உதவுகிறது.
- எல்லாப் பயிர்களுக்கு 15 நாட்கள் முன்னதாகவே அறுவடை செய்ய உதவுகிறது. காய்கறிகள் பழங்கள் மற்றும் தானியங்களின் உபயோகப்படுத்தும் நாட்களை அதிகரிப்பதோடு சுவையையும் தருகிறது.
- மெலிதான எண்ணெய் படலத்தை இலைகளின் மேலும் தண்டுகளின் மேலும் படரச் செய்வதால் நீர் ஆவியாவதைத் தடுக்கிறது. அடர்த்தியான மற்றும் ஆழமான வேர்கள் பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளர உதவுகிறது. மேற்கூறிய காரணங்களால் சுமார் 30% தண்ணீர் தேவை குறைவதோடு பயிர்கள் வறட்சியைத் தங்கி நிற்கும் தன்மையையும் அளிக்கிறது.
உபயோகப் படுத்தும் முறைகள்
- தெளிப்பு
5 முதல் 10 மில்லி உயிர் பஞ்சகவ்யாவை ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து காலை அல்லது மாவை வேளைகளில் தெளிக்கலாம்.
- மண்ணில் இடுதல்
ஒரு ஏக்கருக்கு 3 லிட்டர் உயிர் பஞ்சகவ்யாவை சொட்டு நீர்ப் பாசனம் மூலமாகவோ அல்லது மடைப் பாசனம் மூலமாகவோ மண்ணில் இடலாம்.
panchakavya
panchagavya is a natural mixture scientifically prepared by mixing cow dung, milk, curd, ghee and fruits in a systematic manner.
uses
- It increases the immunity of the crops and makes the crops more disease resistance and makes the infected crops recover.
- It stimulates the growth of crops and helps the crop to grow with many branches. It also produces dense flower blooms with more female flowers.
- panchagavya seed treatment helps in drenching seedlings and saves tuber varieties.
- All nutrients required for plant growth contain micronutrients and growth promoters such as indole acetic acid and gibberellic acid.
- Crops sprayed with bio panchakavya grow very densely with large leaves. Nuyrient intake is promoted and biomass efficiency is increased as it helps to produce bio-chemicals necessary for plant growth.
- It forms a dense and abundant root system. They penetrate deeply and help the crops absorb excess nutrients and water.
Methods of use
- Spraying
Mix 5 to 10 ml of Panchagavya with one liter of water and sprinkle it in the morning or after meals.
- Land preparation
3 liters of panchagavya per acre can be applied to the soil either by drip irrigation or by paddy irrigation.